ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக,நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது .
இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் மொத்த விலை பட்டியல் பின்வருமாறு
- காய்ந்த மிளகாய் கிலோ ரூ.870
- வெள்ளை சீனி கிலோ ரூ.265
- இறக்குமதி செய்யப்படும் உளுந்து கிலோ ரூ.900
- பெரிய வெங்காயம் கிலோ ரூ.320
- உருளைக்கிழங்கு கிலோ ரூ.120
- பருப்பு கிலோ ரூ.295

