28.9 C
Colombo
Friday, August 21, 2026

சாந்தன் இலங்கை வர அனுமதிக்குக! சிறீதரன், மனோகணேசன் கூட்டாக கோரிக்கை – சாதகமாக பரிசீலிப்பதாக ரணில் உறுதி.!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று சனிக்கிழமை நண்பகல்  நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு கோரினர்.

இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை
வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு, சந்திப்பின் போதே ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி இலங்கை சிறீதரன் எம்.பியிடம் கோரியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாமையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles