25 C
Colombo
Tuesday, October 13, 2026

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்த தீர்மானித்துள்ளது.

இதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் (ரூ. 366) ஒரு லீற்றர் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய சில்லறை விலை ரூ. 371.

லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் (ரூ. 464) 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.  அதன் புதிய சில்லறை விலை ரூ. 456.

லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் (ரூ. 358) 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.   அதன் புதிய சில்லறை விலை ரூ. 363.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 (ரூ. 475) ஒரு லீற்றர் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய சில்லறை விலை ரூ. 468.

மண்ணெண்ணெய் லீற்றர் (ரூ. 236) 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய சில்லறை விலை ரூ. 262.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles