24.5 C
Colombo
Sunday, October 11, 2026

சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் சில தினங்களிலேயே உயிரிழப்பு – நல்லூரில் சம்பவம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று(30)இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.

கடந்த ஜனவரி 26 ஆம் திகதி குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles