29.5 C
Colombo
Friday, August 21, 2026

தென்னிலங்கையில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் அடக்குமுறை!

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றிரவு(29) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால்  நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி களனி பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனால் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டிருந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டக்குழுவினரை கலைப்பதற்காக பொலிஸாரால்  நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடாத்தப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles