பாதாள உலகக் குழுத் தலைவனாகக் கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் ஒருவரின் வீட்டின் இரகசிய பதுங்கு குழி ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கிடைத்த இரகசிய தகவலையடுத்து உடுகம்பொலவில் பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டது.
குறித்த சுற்றிவளைப்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

