25 C
Colombo
Sunday, October 11, 2026

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தேர்தல் மூலமே – வெளியான புதிய தகவல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு போட்டியின்றி தலைவரை தெரிவு செய்வது குறித்து ஆராய்வதற்கு நடைபெற்ற கலந்துரையாடல் இணக்கமின்றி முடிந்ததால் தேர்தல் மூலமே கட்சியின் தலைவர் தெரிவாகுவார் என அறியமுடிகிறது.

தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள மூவரும் வியாழக்கிழமை(11) தனியாக பேசி இணக்கம் ஏற்படுத்த முடியுமா என்பதை பார்த்து கட்சித் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் அறிவிக்க புதன்கிழமை(10) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானத்திற்கு அமைவாக, தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் வியாழக்கிழமை (11) மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

எனினும், இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர்  தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால், திட்டமிட்டபடி எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜனநாயக முறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் என அறியமுடிகிறது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபாரணம் ஆபிரகாம் சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய மூவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 2024 ஜனவரி 28ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

தலைவர் உட்பட கட்சியின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழுவில், ஜனவரி 21 ஆம் திகதி அப்பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிப்பர்.

அதில் தேர்வாவோர் ஜனவரி 28ஆம் திகதி நடைபெறும் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டில் புதிய நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles