பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஆகியவற்றினால் யுக்திய தொடர்பில் கூறப்பட்ட விடயங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க தூதுவர் ஜீலி சங் கவலை வெளியிட்டார்.
போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவது இன்றியமையாதது என்பதை ஒப்புக்கொண்ட தூதுவர் சங், சட்ட அமலாக்கச் செயல்பாடுகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் அதற்குரிய நடைமுறையின் கொள்கைகளை நிலைநிறுத்துவது முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
“அந்த சமநிலையை நிலைநிறுத்துவது நீதி மற்றும் பொது நம்பிக்கையைப் பேணுவதற்கு இன்றியமையாதது” என்று அவர் கூறினார்.

