29.5 C
Colombo
Friday, August 21, 2026

பருத்தித்துறையில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தெல்லிப்பழையில் 142 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் திருநெல்வேலியில் 43 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிலேயே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மழை காரணமாக 745 பேர் பாதிப்பு

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles