காணொளியாக பார்க்க…..
https://fb.watch/oWhMM11hJO/?mibextid=Nif5oz
யாழ்ப்பாணம் – மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கடை கட்டிடத்தொகுதி எரிந்து சேதமானது.
இந்தச் சம்பவம் நேற்று(13) இரவு 10:45 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து யாழ் மாநகர சபை தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கடையில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
அதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று இரவு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

