28.9 C
Colombo
Friday, August 21, 2026

கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரிய பொலிஸாரின் மனு நிராகரிப்பு!

கிளிநொச்சியில் மாவீரர் நினைவேந்தலுக்கு 7 பொலிஸ் நிலையங்களால் தடை விதிக்க கோரும் மனு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம், முழங்காவில், தேராவில் துயிலுமில்லங்கள் மற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலுமில்லங்களில் நடைபெறவுள்ள மாவீரர் நினைவேந்தலில் ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் துயிலுமில்ல கட்டுமானம் உள்ளிட்ட சில விடயங்களை உள்ளடக்கி தடை கோரி பொலிசாரால் மன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்மனுதாரர்களின் சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கேசவன் சயந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

காணொளியாக பார்க்க 

https://fb.watch/oxntawytw5/?mibextid=Nif5oz

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles