இந்தியா – தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமானது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
Ferry services between India and Sri Lanka will enhance connectivity, promote trade and reinforce the longstanding bonds between our nations. https://t.co/VH6O0Bc4sa
— Narendra Modi (@narendramodi) October 14, 2023

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தின் நாகப்பட்டிணம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று ஆரம்பமானது.
காலை 11.30 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை செரியாபாணி கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நாகப்பட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ள செரியாபாணி கப்பல், மாலை 5 மணிக்கு துறைமுகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் துறைமுகங்கள், கப்பற்றுறை, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் கலந்துகொள்ளவுள்ளார்.

