கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பஸ் மீது மரம் விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக டூப்ளிகேஷன் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேரூந்து மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக பேரூந்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (06) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

