29.5 C
Colombo
Friday, August 21, 2026

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று ஆரம்பம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று(05) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு கடந்த 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இன்றைய தினம்(05) அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles