23.9 C
Colombo
Monday, October 12, 2026

மீசாலையில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மீசாலைப் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் புகையிரத கடவையை அண்டியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles