28.9 C
Colombo
Friday, August 21, 2026

இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஐயம்

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு வருகை தந்தனர்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகைதந்த இந்திய வெளிவிவகார செயலாளர் தலைமையிலான தூதுக்குழுவினர் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்து ஜூலை 21-ம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

இதுதொடர்பாகவே இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா இலங்கைக்கு விஐயம் செய்து ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles