பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஐனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சி.டி.விக்ரமரத்ன 2020 நவம்பர் 27 ஆம் திகதி பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றார் மற்றும் மார்ச் 26 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்தார்.
எனினும் ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீடிப்பு ஜூன் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இந் நிலையில் அவருக்கு மேலும் மூன்று மாதங்கள் சேவை நீடிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

