23.9 C
Colombo
Monday, October 12, 2026

ஜூலை 21 இந்தியா செல்கிறார் ரணில் விக்ரமசிங்க

இலங்கை ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜூலை 21-ம் திகதி இந்தியா செல்லும் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.

ஐனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றபின் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles