இலங்கை சுங்கப் பிரிவினர் 16 கிலோகிராம் நிறையுள்ள 640 மில்லியன், பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
சரக்கு கொள்கலனில் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதுடன் கொள்கலன் ஏற்றப்பட்ட கப்பல் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து கொழும்பை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யும் போர்வையில் ஹெரோயின் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி கப்பல் கராச்சியில் இருந்து புறப்பட்டதாகவும், ஆழமான குளிர்பதன சரக்கு கொள்கலனொன்றின் காற்று குழாய்க்குள் 12 ஹெரோயின் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் ஹெரோயினும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

