25 C
Colombo
Tuesday, October 13, 2026

கிழக்கில் பல திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கிளிநொச்சியில் கைது

மட்டக்களப்பு திருகோணமலை கல்முனை உட்பட கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள், மற்றும் வீடு உடைப்பு போன்ற 10 திருட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சியில் வைத்து நேற்று சனிக்கிழமை (17) கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகள் மடிக்கணிணி, மோட்டார் சைக்கிள் என்பன மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மட்டக்களப்பில் மோட்டர் சைக்கிள் மற்று வீடுஉடைத்து திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பா பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பிரதான சந்தேக நபரை அடையாளம் கண்டு கொண்டனர்.

இதனையடுத்து சந்தேக நபர் மறைந்திருந்த இடம் தொடர்பாக கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினரே குறித்த  கைதை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்படவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருகோணமலை நிலாவெளியை சேர்ந்த 29 வயதுடைய இவர் கிளிநொச்சியில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் திருகோணமலை, கல்முனையில் மட்டக்களப்பில் பாரதிவீதி மற்றும் றொசாறியா ஆகிய வீதிகளில் இரு மோட்டர்சைக்கிள், உட்பட 5 மோட்டர் சைக்கிள்களை திருடியதுடன்

களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்னஉப்போடை, பாரதிலேன், கதிர்காமர்வீதி ஆகியவற்றில் உள்ள 5 வீடுகள் உடைத்து தங்க ஆபரணங்கள், மற்றும் கையடக்க தொலைபேசி,மடிகளணி திருடியதுடன் மோட்டர் சைக்கிளில் சென்று மட்டு ஜீவிவைத்தியசாலை பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் போன்ற 10 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும்

திருடிய தங்க ஆபரணங்களை விற்று மகேந்திர ரக கப் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளதாகவும்  பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு மோட்டர் சைக்கிள், மடிகணிணி ஒன்று, 7 கையடக்க தொலைபேசிகள், மற்றும் உருக்கிய நிலையில் ஒரு தொகை தங்கத்தினை மீட்டுள்ளதுடன் திருடிய பணத்தில் வாங்கிய மகேந்திர ரக கப் வாகனத்தை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணொளியாக பார்க்க…https://fb.watch/leJiN7uIBF/?mibextid=RUbZ1f

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles