27.8 C
Colombo
Friday, August 21, 2026

கஜேந்திரகுமார் எம்.பி கைது செய்யப்பட்டுள்ளரா? – சற்றுமுன் கஜேந்திரகுமார் எம்.பி வெளியிட்ட தகவல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய பொலிசார் முற்படுவதாக தெரிகிறது.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

இன்று காலை 6.30 மணியளவில் திடீரென வீட்டிற்கு வந்த போலீசார் என்னை மருதங்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பதிவு செய்ய விரும்பினர்.

இன்று காலை பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் விடயத்தை நான் எழுப்புவதைத் தடுக்க பொலிசார் தீவிரமாக உள்ளனர்.

நான் சபாநாயகரை தொடர்புகொண்டு நிகழ்வுகளின் காலவரிசையை அவருக்குத் தெரிவிக்க முடிந்தது. அப்போது சபாநாயகர், நான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு ஜூன் 12 அல்லது அதற்குப் பிறகு கோரியபடி பொலிஸில் முற்படலாம் என்று தெரிவித்தார்.

அதன்படி ஐஜிபியிடம் தெரிவிக்குமாறு சபாநாயகரிடம் கூறியுள்ளேன். எனக்கும் அவர் உறுதியளித்துள்ளார். சபாநாயகர் கூறியதை வீட்டில் உள்ள போலீசாரிடம் தெரிவித்தேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்ய முற்படுகின்றனர் – என பதிவிட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles