28.9 C
Colombo
Friday, August 21, 2026

குருதிக்கு தட்டுப்பாடு; இரத்த தானம் செய்யுமாறு அழைப்பு 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகள் அருகில் இயங்கும் இரத்த வங்கியிலோ அல்லது இரத்த தான முகாம்களையோ ஏற்பாடு செய்து இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு கோரப்பட்டுள்ளது.

குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரத்த தானம் செய்ய முன்வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் கோரிக்கை விடுத்துள்ளதுடன் 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 181 பைந்த் ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை எம்மால் வழங்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்த வங்கி தொடர்ச்சியாக இரத்ததான முகாம்களை நடாத்தி குருதியை சேகரித்து வருகின்றபோதும் தினமும் குருதி விநியோகம் அதிகரித்து செல்கின்றது. குருதி சேகரிப்பை விட குருதி விநியோகம் அதிகரித்து செல்கின்றது.

இதனால் குருதியின் கையிருப்பு தொடர்ந்து குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலை தோன்றியுள்ளதுடன் முகநூல் மூலமாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் தனிப்பட்ட ரீதியிலும் அறிவித்தும் போதுமான குருதி கிடைக்காததுடன் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles