அச்சுவேலியில் நெசவு சாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று மாலை ஆளுநர் செயலகத்தின் அதிகாரிகள் வருகை தந்து நிலமைகளை ஆராய்ந்தனர்.
மேலும் சபை அமைந்துள்ள குறித்த இடத்திற்குச் சென்றும் நிலமைகளைக் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக ஆளுநருக்கு அறிக்கை வழங்கி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அதாவது குறித்த அரச கட்டிடத்தினை விடுவிப்பதற்காக நடவடிக்கையிணையும் தாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதனையும் மேற்கொள்ளுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றனர். பொலீசார் குறித்த விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆளுநர் செயலக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர்.

