28.9 C
Colombo
Friday, August 21, 2026

பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர்; பீரிஸை தூக்கி எறிய கட்சி முடிவு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) செயற்குழு, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும்  அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தவறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் கட்சியின் செயற்குழு அடுத்த வாரம் கூடி புதிய தலைவரை நியமிப்பது குறித்து முடிவெடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles