இன்று ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 25 பேர் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டமொன்று இன்று (26) கொழும்பில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகாமையில் குறித்த போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் கோட்டை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

