28.9 C
Colombo
Friday, August 21, 2026

நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தைப் பெற்ற ஜனாதிபதி

நேற்று(20) நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ், “தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்கும் சட்ட அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார். அந்த அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயன்படுத்துவார் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles