முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததற்காக பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹானா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்த 16 வயது சிறுமி மரணம் தொடர்பாக பொலிஸாரினால் 20 பக்க அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் இந்த அறிக்கைகளில் இரண்டு 16 வயது சிறுமியின் வருகைக்கு முன்னர் முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் பணியாற்றிய வீட்டு உதவியாளர்களிடமிருந்து வந்தவை என தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு வீட்டு உதவியாளர்களும் டயகமவைச் சேர்ந்த 22 மற்றும் 32 வயதுடைய பெண்கள் எனவும் விசாரணையில் பொன்னையா பண்டாரம் அல்லது ஷங்கர் என அடையாளம் காணப்பட்ட ஒரு கடத்தல்காரன் அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
16 வயது சிறுமி மரணம் தொடர்பாக பொன்னையா பண்டாராம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் 2019 வரை கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக 22 வயது பெண் வெளிப்படுத்தியதாக அஜித் ரோஹானா தெரிவித்துள்ளார்.
ஆகவே சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் பதியுதீனின் 44 வயதான மைத்துனர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

