29.5 C
Colombo
Friday, August 21, 2026

மட்டக்களப்பு நகரை அடைந்தது பேரணி

இலங்கையின்  சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து  மட்டக்களப்பு நோக்கி ஆரம்பித்த பேரணி இன்று நான்காவது நாளாக திருகோணமலையில் இருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு நகரை அடைந்தது.

திருகோணமலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் மட்டக்களப்பை அடைந்தது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்,அரசியல் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் அமைப்புக்கள்  என பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles