27.8 C
Colombo
Friday, August 21, 2026

மருதானையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்

மருதானையில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

பாரிய செலவில் கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக சத்தியாகிரகப் போராட்டமொன்று நேற்று(03) ஆரம்பிக்கப்பட்டது.

‘சுதந்திரத்திற்கான சத்தியாகிரகம்’ என இதற்கு பெயரிடப்பட்டது.

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் பங்கேற்றோரும் சில சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்களும் சத்தியாகிரகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

சத்தியாகிரகம் இன்று (04) மாலை 3.30 மணி வரை நடைபெறும் என அவர்கள் அறிவித்திருந்தனர்.

எனினும், அங்கிருந்து வௌியேறுமாறு அவர்களை பொலிஸார் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles