ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை(15) மாலை 3 மணிக்கு நல்லூர் சிவன் கோவில் முன்பாக நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கின்றார்.
அதனைதொடர்ந்து துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்விலும் பங்கேற்பர்.
ஆரியகுளம் நாகவிகாரை, யாழ் ஆயர் இல்லம், நல்லை ஆதீனம் என்பவற்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்வதுடன் அரசியல் தலைவர்கள் சிலரையும் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டமொன்றிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது.

