யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய, வருடாந்த மஹோற்சவம் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி
இடம்பெறவிருந்த நிலையில், கொவிட் அச்சம் காரணமாக செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போதும் நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், முன்னர் ஒத்திவைக்கப்பட்டதைப் போன்று இம் மாதம் 06ஆம் திகதி
மஹோற்சவத்தை நடாத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாக நயினாதீவு ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

