29.5 C
Colombo
Friday, August 21, 2026

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 08.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டனர்.

காணொளியாக பார்க்க… https://fb.watch/lxfepS9gS2/?mibextid=RUbZ1f

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles