இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் மீண்டும் நடத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
போர் அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாப் மற்றும் டெல்லி மோதிய போட்டி நேற்று இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

