25 C
Colombo
Sunday, October 11, 2026

கஞ்சா கலந்த பீடியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவாலாளிகள் பரிசோதித்தபோது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles