28.9 C
Colombo
Saturday, October 10, 2026

சுனாமி பேரழிவின் 19 ஆண்டுகள் – நாளை தேசிய பாதுகாப்பு தினம்

சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ நாளை செவ்வாய்கிழமை (26) அனுஷ்டிக்கப்படுகிறது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் இலங்கையில் 35,000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, 5,000க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

அதன்படி, 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது.

நாளை அனுஷ்டிக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சுனாமி அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles