32.2 C
Colombo
Friday, October 9, 2026

கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

தென்னிந்திய தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றியீட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாானந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை அமைச்சரவை நிறைவடைந்த பின்னர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைத்தொலைபேசி ஊடாக கில்மிஷாவை தொடர்பு கொண்டு இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், நாட்டிற்கு வருகை தந்ததும் நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

கில்மிஷா பற்றி சாரங்கா இசைக்குழுவினர் சொல்லும் கருத்து

https://fb.watch/p0MnatNGb3/?mibextid=RtaFA8

குறித்த போட்டியில் கலந்து கொள்வதற்காக, கில்மிஷா இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்ற போது, எதிர்பாராத விதமாக பலாலி விமான நிலையத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கில்மிஷாவின் பெற்றோர் அமைச்சருக்கு தமது பயணத்தின் நோக்கத்தினை தெரிவித்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கில்மிஷாவை வாழ்த்தி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கில்மிஷாவுக்கு வாழ்த்தி ஜனாதிபதி ரணில் கடிதம்!

பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு பொருத்தமற்ற இடங்களை அகற்ற நடவடிக்கை!

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles