28.9 C
Colombo
Saturday, October 10, 2026

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு பயணித்த புகையிரதம் விபத்து 207பேர் பலி 900-க்கும் மேற்பட்டோர் காயம்; தொடரும் மீட்பு நடவடிக்கை

இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் பாலசோரில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளதுடன் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அந்த செய்தியில்,18க்கும் மேற்பட்ட புகையிரத பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒரிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு புகையிரதம் நேற்று இரவு சுமார் 6.51 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதன்மீது மோதி தடம் புரண்டது. இதில் பல பெட்டிகள் தடம் புரண்டது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி பயணித்த புகையிரதம் என்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்களும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்றுள்ளதுடன் தமிழகத்தில் இருந்து அமைச்சர் குழு ஒரிசா செல்லவுள்ளது.

விபத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர் – என்றுள்ளது.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles