மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் யோசனைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (01) நள்ளிரவு நிலவரப்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 305 ஆக குறைந்துள்ளது.
தொழிற்துறைக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை 134 ரூபாவினால்(புதிய விலை 330 ரூபா) குறைக்கப்படுகிறது.

