32.2 C
Colombo
Friday, October 9, 2026

கல்வியங்காட்டில் கடை உரிமையாளரை தாக்கி 5 இலட்சம் ரூபா கொள்ளை(VIDEO)

சிசிரிவி காணொளி  https://fb.watch/i8X4cLDejT/?mibextid=RUbZ1f

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள கடையொன்றை சேதப்படுத்தி, அதன் உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (18) இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

உரிமையாளர் கடையை மூடுவதற்கு தயாரான நேரத்தில் வாள்  மற்றும் பொல்லுகளுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், கடையிலிருந்து 5 இலட்சம்  ரூபா பணத்தையும் அந்த குழு கொள்ளையிட்டு சென்றுள்ளது.

வெட்டுக் காயங்களுக்குள்ளான  கடை உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு, தடயவியல் விசாரணை மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles