காக்கா-கழுகு கதை விஜய்யை விமர்சித்து கூறியதாக பலர் தவறாக புரிந்துகொண்டனர். விஜய்யை விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் பேசுபொருளானது வருத்தம் ஏற்படுத்தியது.
விஜய் படிப்படியாக வளர்ந்து பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார். விஜய்க்கும் எனக்கும்nபோட்டியில்லை. எனக்கு நானே போட்டி. விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுகின்றனர். எனக்கு என் படங்களே போட்டி. அவருக்கு அவரே போட்டி.
விஜய்யை போட்டியாக நினைப்பதோ, என்னை அவர் போட்டியாக நினைப்பதோ இருவருக்கும் கௌரவம் ஆகாது.விஜய் அரசியலில் நுழையவுள்ளார். சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.என்றும் நான் விஜய்யின் நலம் விரும்பியாகவே இருப்பேன் – என்றார்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய காக்கா -கழுகு சர்ச்சைக்கு லால் சலாம் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்தார்.

