28.9 C
Colombo
Saturday, October 10, 2026

பருத்தித்துறையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் நேற்று செவ்வாய்க்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் காணொளி பதிவுகளை எடுத்து அதனை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில் சிறுமி சுகயீனமடைந்தது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுமி தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளனமை அம்பலமானதாகவும் பின்னர் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.

குறித்த சந்தேகநபரை இன்று புதன்கிழமை(04) நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles