யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கு பொற்பதி விநாயகர் ஆலய உரிமம் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விஜயம் செய்தார்.
பொது மக்களின் அழைப்பையேற்று அங்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினருக்கு அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
இது தொடர்பில் ஆராய்ந்து குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டுவதற்கு உதவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தெரிவித்தார்.

