32.2 C
Colombo
Friday, October 9, 2026

இலங்கையர் கொலை தொடர்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது!

இலங்கைப் பிரஜையின் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர், வெள்ளிக்கிழமையன்று ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வெளிநாட்டவரை கடுமையாக தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

ஊழியர்கள் தொழிற்சாலையை சேதப்படுத்தி, போக்குவரத்தை தடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் “அவமானத்தின் நாள்” என்று இதனை வர்ணித்தார்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles